( 21 Sep, 2015) வேற்றுமை தொகை Published By : upscgk.com வேற்றுமை தொகை இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத் தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. வேற்றுமை உருபுகள் 8 வகைப்படும் 1 - உருபு இல்லை 2 -ஐ 3 -ஆல் 4 -கு 5 -இன் 6 -அது 7 -கண் 8 -உருபு இல்லை மேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.. 1.முதலாம் வேற்றுமைத் தொகை பொருளின் இயல்பான பெயரே முதல் வேற்றுமை தொகை. இதற்கு உருபு இல்லை. இதன் வேறு பெயர்கள்: அ. எழுவாய் வேற்றுமை ஆ. பெயர் வேற்றுமை (எ.கா) கந்தன் வந்தான் ராமன் வந்தான் 2.இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஐ) பால் குடித்தான் - பாலைக் குடித்தான் / மறைந்த உருபு “ஐ” மொழி கற்றான் - மொழி+ஐ+கற்றான் சிலை செய்தான் - சிலை+ஐ+செய்தான். காளை போன்றவன் - காளை+ஐ+போன்றவன் இல்லறம் துறந்தான் - இல்லறம்+ஐ+துறந்தான் கோயில் கட்டினான் - கோயில்+ஐ+கட்டினான். இவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும். 3,மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு) பேனா எழுதினான் (ஆல்) - பேனாவால் எழுதினான் தலையால் வணங்கினான் மரம் வாளால் அறுபட்டது புலவரால் பாடப்பட்ட பாட்டு (ஓடு) - கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது தாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார் 4.நான்காம் வேற்றுமைத் தொகை (கு) நோய் மருந்து - நோய்க்கு மருந்து மயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான் மான் பகை புலி - மானுக்கு பகை புலி 5.ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்) - (இல்) பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை தமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வடவெல்லை திருவேங்கடம் கொடை சிறந்தவன் குமரன்-கொடையில் சிறந்தவன் குமரன் 6.ஆறாம் வேற்றுமை தொகை (அது) கபிலர் பாட்டு - கபிலரது பாட்டு கண் பார்வை - கண்ணினது பார்வை வினைப்பயன் - வினையினது பயன் மலையுச்சி - மலையினது உச்சி என் கை - எனது கை கந்தன் வீடு - கந்தனது வீடு மலர் நீட்டம் - மலரினது நீட்டம் மலை உச்சி - மலையினது உச்சி 7.ஏழாம் வேற்றுமைத் தொகை (கண்) பால் சுவை - பாலின்கண் சுவை மலை மூலிகை - மலையின்கண் மூலிகை கிளை பறவை - கிளையின்கண் பறவை 8.எட்டாம் வேற்றுமைத் தொகை இதன் வேறு பெயர் விளி வேற்றுமை.இதற்கு உருபு இல்லை. பெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம் வேற்றுமைத் தொகை ஆகும். (எ.கா) ராமன் - ராமனே கந்தன் - கந்தனே